சிறகுகள் விற்பவன்

Sunday, July 18, 2010



குலமரம் செழிக்க நீர்தேடும்
வேராய் அந்நிய தேசம் படர்ந்தேன்
விலை பேசப்பட்டன என் சிறகுகள்
இப்போது
அயலான் என் சிறகுகளால்
காது குடைந்து சுகிக்கிறான்
அழகிய சீமாட்டிகள் தத்தமது
தொப்பிகளை அலங்கரித்துக் கொள்கின்றனர்
இறகுகள் ஒவ்வொன்றாய் பறிபோக
சிறகுகள் இழந்தேன்
கிடைத்த கூலியில் உயரமான மரங்களில்
கூடுகளமைத்தேன் என் குலப் பறவைகள்
களித்திருக்க
தூர தேசத்தில் சிறகுகளிழந்த நான்
மடிந்து போவேன் ஒரு நாள்
எம் கொடிகள் இங்கே தழைக்க.

7 comments:

ராஜவம்சம் said...

நல்ல பொருளுடன் கூடிய கரு.
வாழ்த்துக்கள்.

வருணன் said...
This comment has been removed by the author.
வருணன் said...

நன்றி வார்த்தை
நன்றி ராஜவம்சம்

உங்களது வார்த்தைகள் உற்சாகப் படுத்துகின்றன.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

kannan said...

nice one friend

Unknown said...

great one. keep it up.

கிருபா பிள்ளை said...

அருமை

வருணன் said...

நன்றி கிருபா.

Post a Comment