மென்விரல் கரைகள்

Friday, July 16, 2010காற்றினில் மிதந்தாடும்
காகிதங்கள் பறக்காதிருக்க
இரு முனைகளையும்
இறுகப் பிடிக்கின்றாய் உன்
சுண்டு விரலாலும்
சுட்டு விரலாலும்
உன் மென்விரல் கரைகளுக்கு
மத்தியில் அசைவாடுகின்றன இக்கணத்தில்
என் கவிதைகளும்,புனைவுகளும்
கூடவே நானும்.

1 comment:

seylian said...

tharamana muthukkal ivai

Post a Comment