சேகரித்த வார்த்தைகள்

Thursday, July 1, 2010




உனக்காய் என்னுள் உதித்த வார்த்தைகளையெல்லாம்
இரகசிய பெட்டகங்களில் சேமிக்கின்றேன்
நீயோ உன் மௌனத்திற்குள்
ஆழக் குழிதோண்டி சேமிக்கின்றாய்
எனக்கான வார்த்தைகளை
வார்த்தைகள் பெருத்து என் பெட்டகங்களின்
விரிசல்களினூடே கசிகின்றன - உன்
மௌன நிலத்தில் மண்டிய வார்த்தைகளோ
சிருஷ்டிக்கின்றன ஒரு விசித்திர கானகத்தை
உடைந்து சிதறட்டுமென் சுவர்கள்
வெந்து தணியட்டும் உன் காடு.

2 comments:

Unknown said...

விசித்திரமான தருணத்தில் தனியவே செய்யும் ...

வருணன் said...

கண்டிப்பாக வெந்து தணியும்...
நன்றி நண்பா.

Post a Comment