சொல்லவியலாதது
Saturday, June 26, 2010
Posted by வருணன் at 10:32 AMஎனக்கு அருகிலேயே நீயிருந்தும்
உன்னை சந்திக்கமுடியாத சூழலில்
ஏதோ சொல்லவியலா காரணத்தால்
தன் கூட்டை அண்டாத பறவையின்
நிம்மதியின்மையை ஒத்த ஒன்று
பற்றிக் கொள்ளும் இருதயத்தை
கூடவே வந்து சேரும்
ஈன்ற குட்டியை மறுகணமே பிரிந்திடும்
தாய் நாயின் வருத்தங்களை ஒத்ததொரு
வெறுமை.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே.தொடர்ந்து வலைப்பூவிற்கு வருகைதாருங்கள்.
நல்லா இருக்கு. இன்னொரு நாள் வரேன் வருணன். தமிழ்மணம் பட்டிய சேருங்க
Post a Comment