அமர்வு

Wednesday, July 28, 2010உன்னை யாரென்றே நீ
எதிரிருக்கையில் உன் தாயோடு
அமரும் வரை தெரியாது
இப்போதும்...

முன்பின் பரிச்சயமில்லை
ஆயினும் விழிகள்
பரிச்சயமாகிக் கொள்கின்றன

சன்னலோர வேடிக்கைகளின்
ஊடே யதார்த்தமாய்
பார்ப்பது போல் உனைத்
தேடும் கண்கள்

நீயோ தாயின் பின்னாலிருந்து
உன் பார்வையை மட்டும்
படரவிடுகிறாய்

ஒருவர் செய்வதையே மற்றவரும்
செய்து கவனத்தைக்
கவர்வதிலேயே குறியாக

அருகிலிருக்கும் பெரியவரொருவர்
எல்லாம் வயசு என்பது போல்
குறுநகை புரிகிறார்
நம்மைப் பார்த்து

நீ என் தோழியுமில்லை
என்னவளுமில்லை
உனக்கும் நான் அப்படியே
இருப்பினும் எனக்கு நீ
பரிச்சயம் இப்போது

வார்த்தை பேசாது
நம் அமர்வுக்கு
வெறும் சாட்சிகளாய்
மட்டுமிருந்தோம்
இறுதிவரை.

2 comments:

நியோ said...

பெரியவரின் புன்னகையையும் பார்க்கும் கவிஞனின் கண்கள் அழகு !

Jo said...

நன்றி நியோ.

Post a Comment