இரவு பயணம்

Sunday, August 1, 2010வெட்ட வெட்ட
வளரும் கறுப்பு
ராட்சஸர்களாய்
முடிவற்றவை போல
நீளும் நெடுஞ்சாலைகள்

சாலையெங்கும்
சீரான இடைவெளிகளில்
ரத்தக் கண்களுடன்
கண் சிமிட்டிடும்
பிரதிபலிப்பான்கள்

விரித்த கூந்தற் கிளைகளுடன்
இரு புறத்திலும்
வேலி கட்டும்
பெயர் தெரியா
பேய் மரங்கள்

எங்கே பிறந்ததென
விளங்காது
காற்றில் கரையும்
சில் வண்டுகளின்
ரீங்காரம்

எமனின் தூதுவர்களாய்
அசுரத்தனமாய்
எதிர் வரும்
கனரக வாகனங்கள்

நடுநிசிப் பயணம்
நன்றே
சாளரத்தின் வழியே
பார்வையை கசிய விடாதவரை.

4 comments:

நியோ said...

அடுத்த முறை தொலை தூர இரவு பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் கவிதை தான் மனதில் வரும் ...

தமிழ்பாலா said...

நல்ல உவமையோடு கூடிய புதியகோணத்தில் ஒரு புதுக்கவிதையின் அரங்கேற்றம் ,வித்தியாசமானதொரு பார்வையோடு கூடிய இலக்கியப் போக்கு,வருணன் கவிதைகள் ஒரு நவீன இலக்கிய வேகத்தில் வளரும் ஒரு சிறந்த குறியீடு,இன்னும் இன்னும் இன்னும் செழுமைகொண்டு இலக்கியவானில் தாங்கள் பறக்க எனது அன்புகலந்த நண்பர்கள்தின தோழமையான வாழ்த்துக்கள்.

Jo said...

உளம் கனிந்த நன்றி நண்பர்களே.நீங்கள் தரும் உத்வேகம் என்னை இன்னுமதிகமாய் இயங்கத் தூண்டுகிறது. தோழர்கள் தின வாழ்த்துக்கள்.

Balaji saravana said...

ஒரு பேருந்துப் பயணத்தின் காட்சி விவரிப்புகள் மிக அழகு வருணன்! :)

Post a Comment