கவிதை மாதிரி- 2

Monday, March 7, 2011



அது எப்படி?
ஒரு கொடியில் எப்போதும்
இரண்டே கனிகள்!
உன்னில்தான் என் ஐயங்கள்
ஆரம்பமாகின்றன.

எல்லாமே இருண்டு போய்தான் கிடக்கிறது
உன் கார்குழலுக்குள் விழிகள்
சிறைப்பட்டதால்...

என்னை என்ன செய்தாய்?
இன்னும் எதனை மிச்சம் வைத்திருக்கிறாய்?
என்ன ஆனேன் என்பது
எனக்கும் புரியவில்லை
என்ன செய்தாயென்பது
உனக்கும் தெரியவில்லை !

ஒரு வேளை...
நாம் நமக்கே
புரியாத புதிரோ !?

12 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஉன் கார்குழலுக்குள் விழிகள்
சிறைப்பட்டதால்.ஃஃஃஃ

நல்ல உவமிப்பு அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

தங்களின் கருத்துரையை சகோதரன் நிரூபனின் தளத்தில் பார்த்தேன்.... எங்கள் மீது நிங்கள் கொண்டுள்ள விருப்பு மெய் சிலிர்க்க வைத்தது.. நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், கவிதையில் ஒரு கன்னியின் கடைக்கண் பார்வையில் கட்டுண்டதை கவி நயத்துடன் தந்துள்ளீர்கள்.
ஒரு கொடியில் எப்போதும் இரு கனிகள்: ம்... அருமையாகத் தான் சிலேடை போடுகிறீர்கள். தமிழில் தவழ்ந்து விளையாடிருக்கிறீர்கள்.

இதனைத் தான் வைரமுத்து மண்வாசனை திரைப் படத்தில் ஒரு பாடலுக்கூடாக சொன்னார்
‘சின்னக் காம்பு தானே பூவைத் தாங்குது....(பொத்தி வைச்ச மல்லிகை...)

//ஒரு வேளை...
நாம் நமக்கே
புரியாத புதிரோ !?//

மனிதர்கள் எல்லோருக்கும் புரியாத புதிராகத் தான் இருக்கும் மங்கையின் செயல்.
கவிதை மாதிரி - இலக்கிய நயம் கலந்து இன்பமான காதலைச் சொல்லிச் செல்லும் ஒரு அழகோவியம்.

Anonymous said...

ஆதியும் அந்தமும் அவளென்று ஆகும் புதிர்தான் காதலோ?

ஆதவா said...

கவிதையின் ஆரம்பம் ரசித்தேன். ஒவ்வொரு பத்திகளும் தனித்தனியே விசேசமாக இருப்பினும் மொத்தமாக சேர்க்கையில் ஏதோ விட்டுப்போனதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிந்தது மாதிரி!!!

இன்னும் முயற்சி வேண்டும்! ஆனால் கவிதைக்கான அத்துணை உறுப்புகளும் காணக்கிடைக்கிறது! வாழ்த்துக்கள்!

வருணன் said...

நன்றி சுதா.

வருணன் said...

நன்றி நிரூபன். தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மனமுவந்த நன்றிகள்.

வருணன் said...

நண்பா பாலா... நன்றி.

வருணன் said...

தோழா ஆதவா! தங்கள் கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். இதனை நான் கிறுக்கியது 7 வருடங்களுக்கு முன்னர். தாங்கள் எனது வலைப்பூவின் அறிமுக பதிவை வாசித்திருக்கவில்லை என நினைக்கிறேன். அதனால் தான் இவற்றை ‘கவிதை மாதிரி’ என்ற தலைப்பில், ‘முதல் பிரதி’ என்ற பகுப்பின் கீழ் கொணர்ந்துள்ளேன்.

நான் கொஞ்சமேனும் வளர்ந்திருப்பதாகவே கருதுகிறேன். பொழுதிருப்பின் எனது பிற கவிதைகளை தாங்கள் இவ்வலைப்பூவில் அனுபவிக்கலாம்.

வருகைக்கு நன்றி.

Riyas said...

//எல்லாமே இருண்டு போய்தான் கிடக்கிறது
உன் கார்குழலுக்குள் விழிகள்
சிறைப்பட்டதால்//

நான் ரசித்த வரிகள்.. கவிதை நல்லாயிருக்கு..

நானும் கவிதை என நினைத்து கிறுக்குவதுண்டு முடிந்தால் எனது தளம் வாருங்கள்..

வருணன் said...

வருகைக்கு நன்றி ரியாஸ். கண்டிப்பாக உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்...

ஹேமா said...

கவிதை மாதிரி...7 வருடங்களுக்கு முன்னமே ஆரம்பம் அருமையாகவே இருந்திருக்கிறது வருணன் !

Post a Comment