கவிதை மாதிரி-4
Saturday, March 12, 2011
Posted by வருணன் at 7:24 AMஉனக்குப் பிடித்த நிறம்
அது எனக்கும் பிடிக்கும்.
எனக்குப் பிடித்த மணம்
அது உனக்கும் பிடிக்கும்.
உனக்கு என்னைப் பிடித்திருப்பதும்
எனக்கு உன்னைப் பிடித்திருப்பதும்
யாருக்கோ பிடிக்கவில்லை போலும்!
நாம் சேரவேயில்லை...
ஆயினும் ஒன்று மட்டும்
நிஜம்....
நிரந்தரம்...
அது நமக்கு நம்மைப் பிடித்திருத்தல் !
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நிறம், மணம் ஓகே. குணம்....
//அது நமக்கு நம்மைப் பிடித்திருத்தல் //
காலங்கள் ஓடினாலும் எப்போதுமே பிடித்திருக்குமே! :)
உனக்கு என்னைப் பிடித்திருப்பதும்
எனக்கு உன்னைப் பிடித்திருப்பதும்
யாருக்கோ பிடிக்கவில்லை போலும்!
நாம் சேரவேயில்லை...//
வலிகளின் நினைவுகளை வார்த்தைகளினூடே நிஜவடிவம் கொடுத்துள்ளீர்கள். உங்களின் ஆரம்ப காலக் கவிதைகள் என்றாலும் ஆழமான கருத்துக்களைக் கொண்டு நடை போடுகின்றன.
நன்றி கலாநேசன், பாலா, நிரூபன்.
குணம் பிடித்ததால் தானே நண்பா அக்காதலும் இக்கவிதையும் சாத்தியமானது... :)
காலம் மாறினாலும் பிரேமம் மாறாது பாலா.
வலிகள் தேக்கிய வார்த்தைகள் எப்போதுமே தனித்துவமானவை... ஆறிய வடுக்களை கீறிடும் நகங்கள் அவை. அது தான் சற்று சங்கடப்படுத்தும் நம்மை...
Post a Comment