கூட்டுப்புழு

Wednesday, March 16, 2011என் கோப மின்னல்களை
இலாவகமாய் பிடித்து
உன் தூரிகையாக்கிக் கொள்கிறாய்.
உன் மரங்களின் நம்பிக்கை விழுதுகளைப்
பற்றியபடி இப்போதுதான் நடை பயில்கிறேன்.

என்னுலகில் வாசம் செய்திருந்தேன்
தனியனாய்...
உன்னால் அது தலைகீழானது.

நாட்கள் பல பழகியும் மாற்றங்கள்
ஏதுமின்றி அப்படியே யிருக்கிறாய் நீ.
உன்னோடு அன்பைப் பகிர ஆரம்பித்த
கணம் தொட்டு நான் மட்டும்
அன்றாடம் மாறியபடி...

1 comment:

நிரூபன் said...

பெண்களின் பிடிவாதக் குணத்தினைக் கவிதையில் அழகாகச் சித்திரித்துள்ளீர்கள். அதிலும் உங்கள் காதல் இன்று வரை முற்றுப் பெறாது கூட்டுப் புழுவாக ஆரம்ப நிலையிலே எப்போதும் நிற்கிறது எனும் கற்பனை கொஞ்சம் வித்தியாசமானது. இயல்பு நடையில் உங்கள் மன ஓட்டத்தைக் கொண்டு கவிதை நகர்கிறது.

Post a Comment