கவிதை மாதிரி - I

Thursday, March 3, 2011யதார்த்தமாய்தான் இருக்கும் உன் பார்வை
மற்றவர் பார்வைக்கு...
எனக்கு மட்டுமே தெரியும் அதனாழம்.

உன் பார்வைக்குள் என்னை
கரைத்து விடுகிறாய்!
எதற்கும் கலங்காத என் திடமனது
உன் முன் தன் சுயத்தை இழக்கிறது!?

என் சுகதுக்கங்களில் பங்கெடுக்கும்
ஒரு மௌனமான பங்களிப்பாகவும்,
பகிர்வாகவும் – உன் பார்வை.

என் ஆழ்நித்திரைக் கனவுகளில்
வந்து செல்கிறது....
சில வேளைகளில் எனக்கு உயிரளிப்பதும்
சில வேளைகளில் என் உயிரழிப்பதுமான
உனது அதே கண்கள்!

1 comment:

ஹேமா said...

வருணன்...பார்வைகள் பலவிதம்.அதுவும் எங்களுக்கு உரியவர்களின் பார்வையைப் புரிந்துகொள்வதுதான் உண்மையான அன்பு !

Post a Comment