மீளல்

Friday, February 25, 2011



தூரத்து தொழிற்சாலையின் சங்கொலி
நேர மாற்றத்தை ஊதுகின்றது.
வெளிவரும் ஊழியனின் களைப்பும்
உள்வருபவனின் மலைப்பும்
ஒரு கவிதை புத்தகத்தின்
முதல்,கடைசி பக்கங்களாய்
அருகிருந்தும் மிக தூரமாய்.
பாராட்டப் படாத அவனது
உழைப்பிற்கான ஊதியம் கூட
முறையாய் கிடைக்காத அவலம்
பூசுகிறது சிவப்பின் வண்ணங்களை
சிந்தைக்கு
தொடர்ந்து ஊற்றெடுக்குமந்த
சீவ நதியின் ஊடே கரைதனில்
கேட்கிறது துணைவியின் குரல்
திருப்பித் தர வேண்டிய கடன்களைப்
பற்றிய புகாராய்
மீளல் மிக எளிதாகிறது.
வரள ஆரம்பிக்கிறதொரு சீவ நதி.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (20.02.11) இணைய தளத்திற்கு நன்றி.

2 comments:

ஹேமா said...

வணக்கம் வருணன்.பெயரும் அழகு.

நிறைவான தமிழ்ச் செறிவான கவிதைகள்.இலக்கிய நூலகம்போல எங்கும் எங்கும் தமிழால் நிறைத்திருக்கிறீர்கள்.மீண்டும் வருவேன் !

வருணன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஹேமா.

Post a Comment