குறுஞ்செய்திகள்

Monday, February 14, 20111
படுக்கையில் புரண்டபடி
உறங்காமல் நான்
அதே மஞ்சத்தில் ஓர்
ஓரமாய் ஆழ்ந்த்திரையில்
என் கைபேசி
எப்போதுன் வார்த்தைகள்
அதன் மௌனம் கலைக்கின்றனவோ
அப்போது நான் நித்திரையிலாழ்வேன்.


2
துவக்கத்தில் என்னவோ
குறுஞ்செய்திகளாய் தான்...
பின்னரவை மெல்ல
நீண்டு பேச்சுக்களாய் உருமாறும்
குறுஞ்செய்தியெனும்
உடை தரித்தபடி
பெருகும் நேசமும்
பரிகசிப்பும் விளையாட்டுமாய்
நம் பரிமாற்றங்களால் அவை
தொடரும் முடிவற்ற நெடுஞ்சாலையாய்.
நீள்கின்றன நமது முன்னிரவுகள்.
இரவு வணக்கம் சொல்லி
முடித்துக் கொள்ள எத்தனிக்கையில்
மீண்டும் தொடர்வோம்
நம்மில் யாரவதொருவர்.
இறுதியில்
கைபேசியின் பொத்தான்களை
அழுத்தி அழுத்திச் சோர்ந்த விரல்களும்
பார்த்துப் பார்த்து களைத்த விழிகளும்
ஒரு சேர கெஞ்சிட
போனால் போகிறதென
முடித்துக் கொள்வோம்
அன்றைய பரிமாற்றத்தினை
மறுநாளைய சந்திப்பு குறித்த
பீடிகையுடன் !

4 comments:

S.Sudharshan said...

//இரவு வணக்கம் சொல்லி
முடித்துக் கொள்ள எத்தனிக்கையில்
மீண்டும் தொடர்வோம்
நம்மில் யாரவதொருவர்/// :-)

வெறும்பய said...

நானும் எதோ எஸ்.எம்.எஸ் பற்றி தான் எழுதிரிருக்கீங்கலோன்னு நினச்சேன்...

அருமை..

தினமும் நடக்கிறது இது போன்ற நாடகங்கள்..

Balaji saravana said...

இயல்பு நிலைய அப்படியே அழகா சொல்லிட்டீங்க வருணன்! :)

வருணன் said...

நன்றி சுதர்ஷன்...

நன்றி வெரும்பய. நடப்பவை நாடகமென்றால் நாமும் சேர்ந்து நடித்திருப்போம்... :)

நன்றி பாலா... இது தான் இப்போதைய உண்மையான இயல்பு நிலையா! அப்போ எல்லோருமா? :)

Post a Comment