பிறருக்காக வாழ்பவன்

Saturday, February 12, 2011



பெரும் ரசனைக்காரனாக
தன்னைப் பறைசாற்றிக் கொண்டவன்
எரிச்சலுருகிறான் தாமதமாவது பற்றி
நாவிதனின் விரல்களுக்கிடையில்
நர்த்தனமிடும் கத்தரியின் கிறீச்சொலியை
ரசிக்காமல்...
தான் பிறருக்காகவே வாழ்பவனென
அவன் சொல்லிக் கொள்வதில்
ஒரேயொரு உண்மையும்
சிலவேறு அர்த்தங்களும்
இருக்கவே செய்கின்றன.



இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (06-02-11) இணைய தளத்திற்கு நன்றி.

2 comments:

Unknown said...

நல்கவிதை..வாழ்த்துக்கள்

வருணன் said...

நன்றி கலாநேசன். நல்ல பெயர் தங்களுடையது...

Post a Comment