பிரிவு-IV

Saturday, February 5, 2011



உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு
புகைப்படம் கூட வைத்துக் கொள்ளவில்லையே?!
என்னுலகை முழுமையாய் அடக்க
உறைந்த அந்த ஒற்றை கணம்
எப்படி போதுமெனக்கு?
இவ்வளவு எழுதியும் உன்னைப்பற்றி
வாசிக்கும் இவர்களுக்கெல்லாம்
அறிமுகம் தானே செய்ய முடிகிறது...
உன்னை சிலாகிக்கும் என்
பிரத்தியேக மௌனத்தை எப்படி
இவர்களுக்கு புரியும் வண்ணம்
வார்த்தைகளில் மொழிபெயர்ப்பேன்?!

2 comments:

Anonymous said...

எப்போதும் ப்ரியத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாதே அதே போலத் தானே மௌனமும்! :)
உங்கள் பார்வைக்கு, http://balajisaravana.blogspot.com/2011/02/blog-post.html

வருணன் said...

நன்றி பாலா. கண்டிப்பாக நீங்கள் அனுப்பியுள்ள இணைப்பை வாசிக்கிறேன்...

Post a Comment