பிரிவு-V

Monday, February 7, 2011



அனிச்சை செயல்போல
உன் வீட்டைக் கடக்கையில்
நீயமர்ந்த திண்ணையினை
விழிகள் கழுவிச் செல்லும்.
நீயிருந்தபோது வழியனுப்பிச்
சைகை புரிவாய்
அப்போதுன் முன்னே விழும்
முடி விழுது பற்றியேறி வர
யத்தணித்த தருணங்கள்
நெஞ்சில் நிழலாடும்.
உன்னைப் பிரிந்தென்னால்
இருக்க முடியும்...
முடிகிறது.
உன் நினைவையும் பிரிந்தென்பதை
மறுபரிசீலனைகளுக்கு
உட்படுத்த வேண்டும்.

4 comments:

Philosophy Prabhakaran said...

// உன்னைப் பிரிந்தென்னால்
இருக்க முடியும்...
முடிகிறது.
உன் நினைவையும் பிரிந்தென்பதை
மறுபரிசீலனைகளுக்கு
உட்படுத்த வேண்டும். //

பிரமாதமான வரிகள்...

வருணன் said...

நன்றி பிரபா...

நினைவுகள்
நாம் அருந்தக் கிடைக்கும்
அமுதம் - சில வேளைகளில்
அதுவே விடமும்...!

குட்டிப்பையா|Kutipaiya said...

//அனிச்சை செயல்போல
உன் வீட்டைக் கடக்கையில்//

இந்த மாதிரி நிறைய இருக்கு’ல்ல ? :)

வருணன் said...

ம்... கண்டிப்பாக இது போல் நிறைய இருக்கிறது.

வருகைக்கு நன்றி குட்டி பையா...

Post a Comment