கவிதை மாதிரி-3

Thursday, March 10, 2011என் மேல் எனக்கிருந்த
நம்பிக்கை குறைகிறது
என் விழி தாண்டி
எதையோ நீ தேடுகையில்...

எங்கே கற்றுக்கொண்டாய்
விழிகளாலேயே
உயிர் தீண்டிப் பார்க்கும்
அந்த வித்தையை !?

சுகமாய் தானிருக்கிறது
படபடக்கும் உன்
பட்டாம்பூச்சி விழிகளைப்
பார்க்கையில்!

ஆனால் நீ பார்ப்பதால்
எனக்குள் துளிர்க்கும் மாற்றத்தை
அது பிரதிபலிப்பதெப்படி?

7 comments:

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க...

Balaji saravana said...

நைஸ்! :)

வருணன் said...

நன்றி கலாநேசன்... அழகிய பெயர் தங்களுடையது.

வருணன் said...

நன்றி பாலா...

சிவகுமாரன் said...

அருமை.
நம்பிக்கை துளிர்த்து விட்டதா இல்லையா ?

வருணன் said...

அந்த நம்பிக்கை துளிர்த்திருந்தால் நான் ஏன் இவ்வரிகளை எழுதப் போகிறேன்... :)

நிரூபன் said...

ஆனால் நீ பார்ப்பதால்
எனக்குள் துளிர்க்கும் மாற்றத்தை
அது பிரதிபலிப்பதெப்படி?//

பார்வைகளின் பரிமாறல்களினையும், பாவியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் பாவலனின் உணர்வுகளையும் ரசித்தேன். உங்கள் கவிதைகளில் வார்த்தைகளை நீங்களாக வலிந்து இழுக்காமல், அவை இயல்பாக வந்து விழுந்ததாக படிக்கும் போது உணர்கிறேன். தொடர்ந்தும் பயணிக்கவும்!

Post a Comment