கவிதை மாதிரி-5

Monday, March 14, 2011



உன் கூந்தல் அலை
நானிருக்கும் திசை நோக்கி
வீசும் போதும்...
உன் கேசக் காட்டினுள்
என் முகம் புதைக்கும் போதும்...
உன் சிகைப் போர்வையினுள்
துயிலும் போதும்...
எனக்குள் போதையேறும்
ரசாயன மாற்றம்.

அப்படியேன்ன
வாசனைத் தொழிற்சாலை
வைத்திருக்கிறாய்
உன் சிரத்தில்!

இப்போது புரிகிறது
ஈசனும் நக்கீரனும்
எதற்காக அடித்துக்
கொண்டார்களென !

3 comments:

Anonymous said...

//மோக புத்ரி//
அம்சம் வருணன்! :)

வருணன் said...

நன்றி பாலா... எனக்கும் இப்பெயர் பிடித்திருந்தது...

நிரூபன் said...

இப்போது புரிகிறது
ஈசனும் நக்கீரனும்
எதற்காக அடித்துக்
கொண்டார்களென !//

வணக்கம் சகோதரம், பெண்ணின் கூந்தலின் பின்னுள்ள, பலருக்குப் புலப்படாத விடயங்களை கவிதையினூடு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி என்ன தான் வாசனையோ அவள் கூந்தலில்? என்று பல பேர் ஏங்குவதையும் கேட்டிருக்கிறேன். அகில் அல்லது சாம்பிராணிப் புகையினை முற்காலத்தில் பெண்கள் தங்கள் கூந்தலுக்கு அருகில் வைத்து புகைக்கப் போடுவார்களாம்.
காரணம் அவர்கள் கூந்தல் இன்னும் நறுமணம் வீச வேண்டும் என்பதற்காக.

Post a Comment