பசி

Friday, October 8, 2010



1


இலட்சிய வேட்கையையும்
சாதிக்கும் தாகத்தையும்
பல அவயங்களில்
விஞ்சி நிற்கிறது
பாழாய் போன
பசி !




2


இந்த ஏழையின் மீது இரங்கி
இறை கேட்டான்,
’என்ன வேண்டுமானலும்
கேள் தருகிறேன்’, என்று.
ஒன்றே கேட்டேன்
‘பசி வேண்டா‘.
சிலகண மௌனத்துக்குப் பின்
மன்னித்துவிடு என்பது போல்
பார்த்து
ஈரத்துணி தந்தான் இறைவன்.

3


நான் இயங்க வேண்டிய
தளங்கள் வேறு
பயணிக்க வேண்டிய திசைகள் வேறு

இதயெல்லாம் விடுத்து
தெரிந்தே செல்கிறேன்
எனக்கு ஒவ்வாதவொரு திசையில்

இயங்கிக் கொண்டிருக்கிறேன்
முற்றிலும் மாறுபட்டதொரு தளத்தில்
ஒன்றே ஒன்றிற்காய்...

வயிறு .

8 comments:

nis said...

;((

Anonymous said...

முகத்திலறையும் உண்மை..
கனவுகளும் இலட்சியங்களும் திருப்பி விடப்படுகின்றன பசிவிரட்டும் காரணி நோக்கி..
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க வருணன்..
மிக அருமை நண்பா.. உங்கள் ஆதங்கம் பார்த்துத்தான் இங்கு வந்தேன்.. என்ன சொல்ல அசந்தேன்..
உங்களோட கவிதைகள் சில ( நேரமின்மையால் இப்போது சில மட்டும்..) படித்தேன்.
சொல்லாடல்களும் மொழியாளுமைகளும் இயல்பாய் கட்டுண்டு கிடக்கிறது உங்கள் கவிதைகளில்..
"கால்களின் மொழி", "உன்னோடிருத்தல்" மனுஷ்யபுத்திரன் படித்துக் கொண்டிருக்கிறேனோ என்னவோ என எண்ணம் கொள்ளச் செய்தது..
இவ்வளவு நாள் உங்களை அறியாமல் இருந்திருக்கிறேனே :(
பதிவுலகிலும் நீங்கள் கொண்டாடப் படவேண்டியவர் இப்போது அறியப்படாமலே இருக்கிறீர்களே.. :(
இனிமேல் தொடர்ந்து வருவேன் உங்களை...
நீங்கள் கவிதைத் தொகுப்பு ஏதாவது வெளியிட்டிருக்கிறீர்களா?
கருத்துரையே பதிவாகிடும் பயத்தால் இப்பொழுது விடைபெறுகிறேன் வருணன். ( எவ்வளவு அழகான பெயர் உங்களுடையது :) )

பின் குறிப்பு: நானும் மதுரைதான் என்பதில் மற்றொரு சந்தோசம் நண்பா..

வருணன் said...

நன்றி ராவணா.இங்கும் என் எழுத்துக்களை தொடர்வதற்கு மனமார்ந்த நன்றி.

வருணன் said...

பாலா நீண்ட நாட்களாகிறது கண்கள் கலங்கி.உங்கள் பின்னூட்டத்தை படித்த மறுகணமே...

தனியனாய் கனவுகள் தின்று கவிதைகள் கிறுக்கித் திரிந்தேன். வாசிக்கப்பட கண்கள் தேடிக் களைத்த என் வார்த்தைகளுக்கு ஆறுதல் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன் இதுவரையில்...

நன்றி என்பது சிறிய வார்த்தை. அதையும் தாண்டிய ஒரு சொல்லை என் மூளையில் மண்டிக்கிடக்கும் மொழியில் தேடிச் சொல்கிறேன் விரைவில்.

கவிதைத் தொகுப்பென்பது இதுவரையில் கனவுகளில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது...

R. Gopi said...

வருணன், பேருக்கேத்த மாதிரி மழையா போழிகிறீர்கள்.

R. Gopi said...

வருணன், வோர்ட் வேரிபிகேஷன் தூக்கிடுங்க. அது இருந்தா யாருமே பின்னூட்டம் போட மாட்டாங்க

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice...........

கோநா said...

kavithai concept is nice, 'வேண்டுமானலும்'-small typing mistake?

Post a Comment