நான், நீ, காமம்

Friday, October 15, 2010உன்னையும் என்னையும்
இணைக்கும் பசை

நீட்சியுரும் யாமத்திலும்
தொடர்ந்திடும் ஒரே விளையாட்டு

ஒரே உடல்தான் எனக்கு
அது போலவே உனக்கும்...

ஆயினும் ஒவ்வொரு முறையும்
புதிய கதவுகளை திறந்தபடியே

உன்னையும் என்னையும்
மெத்தையில் சமைத்து
நமக்கு நாமே பரிமாறி
உண்டு களிக்கிறோம்.

விருந்தும் நாமே
விருந்தினரும் நாமே...
அதிசயம் தான் !

உன்னுடல் வழியே
உன்னுயிர் சேரும் நான்
என்னுடல் வழியே
என் சுயம் சேரும் நீ

காமம்
நம்மைப் பிணைக்கும்
மாயச் சங்கிலி.

11 comments:

Balaji saravana said...

//ஆயினும் ஒவ்வொரு முறையும்
புதிய கதவுகளை திறந்தபடியே//

//விருந்தும் நாமே
விருந்தினரும் நாமே...
அதிசயம் தான் !//

அருமைதான் :)

//உன்னுடல் வழியே
உன்னுயிர் சேரும் நான்
என்னுடல் வழியே
என் சுயம் சேரும் நீ//
செம..
ரொம்ப அழகா வந்திருக்கு வருணன்!

Balaji saravana said...

அந்த படம் கலக்கல் பாஸ் ;)

bogan said...

good.continue writing

Gopi Ramamoorthy said...

நல்லா வந்திருக்கு

வருணன் said...

நன்றி பாலா.

வருணன் said...

நன்றி போகன். வித்தியாசமான பெயர் தங்களுடையது. வருகைக்கு நன்றி.

வருணன் said...

நன்றி கோபி. நீங்கள் சொல்வது போல தமிழ் மணத்தில் இணைக்க முயற்சி செய்தேன் நண்பா. எனக்கு அது எப்படி என்றே புரியவில்லை. தமிழிஷ் தான் எளிதாக உள்ளது போல தோன்றுகிறது. இருப்பினும் வாசகர் வட்டம் அதிகமாக தமிழ் மணத்தில் இணைப்பதே நல்லது. முயற்சிக்கிறேன்.

வருணன் said...

பாலா இந்த படத்தை சிறிது யோசனைக்குப் பிறகே தேர்ந்தெடுத்தேன். வரிகளுக்குப் பொருத்தமான படம் என்பதால் தான் தேர்ந்துகொண்டேன். பிடித்திருந்தால் சரி.

radhika said...

Sir, Really ethu mathiri oru kavithai nan padithathillai.

Hatts off.

http:/www.Vasishtar.wordpress.com

வருணன் said...

நன்றி ராதிகா. தங்கள் மகனின் நிழற்படம் அழகு. அவனது வாழ்வு செழிக்க வாழ்த்துக்கள்...

vazhipokanknr said...

உன்னையும் என்னையும்
மெத்தையில் சமைத்து
நமக்கு நாமே பரிமாறி
உண்டு களிக்கிறோம்
very nice lines varunan...

Post a Comment