தந்தையாதல்

Tuesday, October 26, 2010
அகால வேளைகளில்
தொந்தி சரிய அயர்ந்துறங்கும்
துணைவியினுள்ளே துள்ளல்
காணும் கணங்களில்
அவளை துயிலெழுப்பாமல்
வருடும் நடுங்கும் விரல்கள்.

தாயாகும் பூரிப்பினிடையே
பயங்கள் மிதக்கும்
மிரட்சிக் கண்களுருளும்
முகத்தை ஆதரவாய்
வருடும் கரங்கள்

வேறெப்போதிலும் தராத
பயத்தின் வர்ணங்களை
வரிந்து கொள்ளும்
மருத்துவமனையின் வெண்மை

குறுக்கும் நெடுக்குமாய்
ஆஸ்பத்திரி செவிலிகள்
பயணிப்பர் தடதடக்குமென்
இதயத் தண்டவாளத்தின் மேலே
பதிலேதும் சொல்லாமல்

எப்போதுமில்லாமல்
மனம் அரற்றியபடி
ஏங்கிக் கிடக்கும்
ஒற்றை அலறலுக்கும்
அதைத் தொடரும் அழுகுரலுக்கும்.

தவிப்புகளுக்கு மத்தியில்
தந்தையாதலும் மறுபிறப்பே
மங்கையின்
தலைப் பிரசவத்தைப் போல.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(24.10.10)இணைய இதழுக்கு நன்றி

10 comments:

LK said...

உண்மைதான். மனத்தால் பிரசவிக்கிறோம்

Balaji saravana said...
This comment has been removed by the author.
Balaji saravana said...

//தவிப்புகளுக்கு மத்தியில்
தந்தையாதலும் மறுபிறப்பே//
உணர்வின் வெளிப்பாடு அருமை வருணன்!

காமராஜ் said...

இப்படியொரு இயல்புக் கவிதை எழுத்தின் வசீகரத்தையும்,புரிதலையும் கூட்டும். அழகு வருணன்.

விரியட்டும் வலையின் திசைகள்,நீளட்டும் எழுத்தின் கரங்கள் வாழ்த்துக்கள்.

Gopi Ramamoorthy said...

சூப்பர்

சேரல் said...

Nice one :)

வருணன் said...

நன்றி LK.

வருணன் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் உளம் கனிந்த நன்றிகள் காமராஜ்.

வருணன் said...

நன்றி சேரல்.

வருணன் said...

நண்பர்களே பாலா, கோபி... உங்களுக்காகவே எழுதத் தோன்றுகிறது...

Post a Comment