முடிவற்றதொரு கடிதம்

Monday, September 13, 2010எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
உனக்கு அனுப்பாத கடிதத்தை
எவ்வளவு எழுதிய பிறகும்
சொல்வதற்கு ஏதோவொன்று
மிச்சமாய் இன்னும்…
முடித்திட முடிவு செய்யும்
ஒவ்வொரு கணத்திலும்
தொடுவானில் புள்ளி பிம்பமாய்
மினுக்கும் உன்னிடம்
சேர்ப்பிப்பது பற்றிய
என் ஐயங்களுக்கு
பதில் தேட முனையாது
எழுதியபடியே இருக்கிறேன்.

3 comments:

Anonymous said...

அழகுக் கவிதை.. அழகான ப்ளாக் டெம்ப்ளேட்..

வருணன் said...

நன்றி ராதை. தங்கள் வருகைக்கு, வாசிப்பிற்கு, பின்னூட்டத்திற்கு எல்லாவற்றிற்கும்...
தங்களது பெயரே கவித்துவமாக உள்ளது. அழகு.

shammi's blog said...

nice one.... this sort of feel happens to all at certain point of time....may be the emotion varies....

Post a Comment