இருப்பது, வளர்வது

Sunday, September 5, 2010




வயல் வரப்பில் நடந்து
செல்பவனிடம்
ஏற்றிக் கட்டிய உள்பாவாடையுடன்
பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருக்கும்
பருவப் பெண் கபடமற்று கேட்கிறாள்
“ஏப்பண்ணே ஊர்ல இருந்து வந்த?
நல்லா இருக்கியா?”
அவளுக்குள் மனுஷி இருக்கிறாள்
மனிதம் வளர்கிறது.
“நல்லா இருக்கேன் தங்கச்சி”,
உதட்டளவில் வார்த்தை பேசி
மனதினுள் அவளவையங்களை
மேய்ந்து எச்சில் விடுகிறவனிடமும்
மனிதன் இருக்கிறான்...
மிருகம் வளர்கிறது.

2 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

woww!!!
arumai!!

வருணன் said...

நன்றி நண்பா. யாரும் இந்த கவிதையை ரசிக்கவில்லையோ என நினைத்தேன்...

Post a Comment