சே IX- நாங்கள் தொடர்வோம் காம்ரேட்

Sunday, May 22, 2011



சே எனும் ஆளுமையை, எங்கொ ஒரு அந்நிய தேசத்தில் வாழ்ந்து மடிந்த ஒரு அர்ஜண்டினிய மருத்துவனைப் பற்றி ஏன் நாம் இவ்வளவு நாட்களாக சிந்திக்க வேண்டும். எவ்வளவோ தலைவர்கள் மக்களுக்காவும் அவர்களது நல்வாழ்விற்காகவும், விடுதலைக்காகவும் போராடவில்லையா? வரலாற்றின் சகல பக்கங்களிலும் நமக்கு அவை காணக் கிடைக்குமில்லையா? நமது நாட்டில் காந்தியடிகள் போராடினார், நெல்சன் மண்டேலா கறுப்பின மக்களின் விடுதலைக்கு போராடினார்... ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ், யாசர் அராபத் என உதாரணங்களை அடிக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நாம் ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது. இவர்கள் எல்லொரும் தமது தேசத்திற்காக, இனத்திற்காக, மக்களுக்காக போராடியவர்கள். ஆனால் ஒரு அர்ஜண்டைன உயர்குடியில் பிறந்த ஒரு மருத்துவன், எவ்விதத்திலும் தனக்குத் தொடர்பு இல்லாத கியூப மக்களுக்காக ஏன் போராட வேண்டும்? காங்கோவின் வறட்சியில் எதற்காக உழல வேண்டும்? பொலிவிய காட்டில் ஆஸ்மாவின் கொடுமையோடு வனத்தில் அனாதையைப் போல ஏன் பிடிபட வேண்டும்? அதற்கெல்லாம் ஒரே ஒரு பதில் தான் சொல்ல முடியும். சக மனிதனின் பால் சேவுக்கு இருந்த அளப்பறிய நிபந்தனையற்ற பேரன்பும்[Unconditional Love], அவர்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கப் படாமல் கிடைக்க வேண்டுமென்ற பெரும் அக்கறையுமே !

சேவின் இறுதிக் கடிதத்திற்கு( 1965ல் அவர் எழுதியது) மறுமொழி கூறுவது போல் 1965ல் கியூபக் கலைஞர் “கார்லொஸ் பாப்லா” என்பாரால் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டது தான் ” ஹாஸ்டா சீம்ப்ர” எனும் உணர்ச்சி மிக்க பாடல். இப்பாடல் பலரால் பாடப்பட்டிருந்த போதிலும், நடாலி கார்டோன்[Nathalie Cardone] எனும் பிரஞ்சு பாடகி பாடிய இப்பாடலின் நவீன வடிவம் உலகப் புகழ் பெற்றது. இப்பாடலின் ஸ்பானிய வடிவமும் அதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே தரப்பட்டுள்ளது.





Original lyrics in Spanish

Aprendimos a quererte
desde la histórica altura
donde el Sol de tu bravura
le puso cerco a la muerte.

Chorus:
Aquí se queda la clara,
la entrañable transparencia,
de tu querida presencia,
Comandante Che Guevara.

Tu mano gloriosa y fuerte
sobre la Historia dispara
cuando todo Santa Clara
se despierta para verte.

[Chorus]

Vienes quemando la brisa
con soles de primavera
para plantar la bandera
con la luz de tu sonrisa.

[Chorus]

Tu amor revolucionario
te conduce a nueva empresa
donde esperan la firmeza
de tu brazo libertario.

[Chorus]

Seguiremos adelante,
como junto a tí seguimos,
y con Fidel te decimos:
«¡Hasta siempre, Comandante!»

[Chorus]

Translated English lyrics:

We learned to love you
from history's heights
where the sun of your bravery
laid siege to death

Chorus:
Here lies the clear,
the deep transparency
of your beloved presence,
Commandante Che Guevara

Your glorious and strong hand
fires at history
when all of Santa Clara
awakens to see you

[Chorus]

You come burning the breeze
with springtime suns
to plant the flag
with the light of your smile

[Chorus]

Your revolutionary love
leads you to a new undertaking
where they await the firmness
of your liberating arm

[Chorus]

We will carry on
as we followed you then
and with Fidel we say to you:
Until always, Commandante!

[Chorus]




சே நீ மடியவில்லை. அநீதிக்கெதிரான, அடக்கு முறைக்கு எதிரான எங்களின் இவ்வொரு குமுறலிலும் நீ இருக்கிறாய். புரட்சி எனும் சொல்லோடு பிணைந்து நீ எங்களின் உணர்வாகினாய் ! எங்கள் உணர்ச்சி என்றும் சாவதில்லை. ஆகவே நீயும்....






குறிப்பு: எந்த ஏகாதிபத்தியத்தை சே எதிர்த்தாரோ அதனுடைய குழந்தையான நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரப் பிடியில் (சேயின் உருவத்தை நீங்கள் உடைகளில்,தொப்பிகளில், சாவிக் கொத்துகளில், தேனீர்க் கோப்பகளில், சில அழுக்குப் பிடித்த அரசியல் விளம்பரங்களில் என எங்கும் பார்த்திடலாம். உலகிலேயே அதிக பட்சமாக பல்வேறு வகைகளில் பிரதியெடுக்கப் பட்ட புகைப்படம் சேவுடையது தான்) இவர் சிக்கிக் கொண்டது, சே எனும் ஆளுமையை புரிந்து ஏற்றுக் கொண்ட எல்லா காம்ரேடுகளுக்கும் ஒரு சோகச் செய்தியே!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சக மனிதனின் பால் சேவுக்கு இருந்த அளப்பறிய நிபந்தனையற்ற பேரன்பும்[Unconditional Love], அவர்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கப் படாமல் கிடைக்க வேண்டுமென்ற பெரும் அக்கறையுமே !//
மிக அருமையானதொரு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வருணன் said...

தொடர் ஊக்கத்துக்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.

Post a Comment