பிரத்தியேக சிப்பிகள்

Wednesday, January 5, 2011நம்முடைய இதயங்கள் விளக்குகள்
அன்பென்னும் தீ எரிகின்றதவற்றில்
எரியுமச் சோதி நம்மிதயங்களை
ஓர் இதயமாய், ஓர் ஆன்மாவாய் மாற்றுகிறது.
பொங்கும் நேசத்தை எப்படி
பரிமாறிக் கொள்வதெனப் புரியாது
எதையாவது பேசியபடியே நாம்.

விடைபெறும் தருணம் வரும்
ஒவ்வொரு நாளும் என்னுதட்டில்
இருக்கும் புன்னகையை உன்னிதழில்
ஒட்டி வர முனைகிறேன்.
நீயோ ஒற்றை பார்வையில்
உன் கண்களில் தேக்கிய
பிரிவின் கணத்தை என் விழிகளுக்குள்
இடம்பெயரச் செய்து விடுகிறாய்!

உனக்காய் நான் தயாரிக்கும்
வார்த்தைகள் அன்பின் கரையில்
தன் தோழிக்காய் சிறுவனொருவன்
சேகரிக்கும் சிப்பிகளைப் போன்றவை.
பிரத்தியேகமானவை...
அவற்றின் ஆழம்
நமக்கு மட்டுமே புரியும்.

6 comments:

Philosophy Prabhakaran said...

@ வருணன்
// நண்பா எங்களையெல்லாம் கண்டு கொள்ள மாட்டீர்களா? கவனிப்பாரின்றி (வாசிக்கும் சில ஜீவன்கள் நீங்கலாக) பாலைவனமாக கிடக்கிறது எனது வலைப்பூ... யாராவது வாங்கப்பா... //

என்ன நண்பரே... இப்படியெல்லாம் கேட்டு கஷ்டப்படுத்துறீங்க... நாங்க இருக்கோம்... இதோ வர்றேன்...

சிவகுமார் said...

நண்பா எங்களையெல்லாம் கண்டு கொள்ள மாட்டீர்களா? கவனிப்பாரின்றி (வாசிக்கும் சில ஜீவன்கள் நீங்கலாக) பாலைவனமாக கிடக்கிறது எனது வலைப்பூ... யாராவது வாங்கப்பா..// வந்தாச்சி..பின்தொடர்ந்தாச்சி..ஓட்டும் போட்டாச்சி...தொடரட்டும் உங்கள் பதிவுலக பயணம்!!

வருணன் said...

கஷ்டப்படுத்துவதெற்கெல்லாம் இல்லை. சும்மா மனதில் தோன்றியதை சொன்னேன். அவ்வளவே. வருகைக்கு நன்றி பிரபா.

வருணன் said...

உங்கள் வாழ்த்துக்கு என் நன்றி சிவா.

குட்டிப்பையா|Kutipaiya said...

விடைபெறும் தருணம் வரும்
ஒவ்வொரு நாளும் என்னுதட்டில்
இருக்கும் புன்னகையை உன்னிதழில்
ஒட்டி வர முனைகிறேன்//

சில முயற்சிகள் எப்போதும் தோல்வி தான் இல்ல ? :(

nice lines!

வருணன் said...

ம்... சில வலிகளுக்கு மாற்று மருந்துகள் கிடைப்பதே இல்லை எப்பொதும்...

நன்றி பாரதி...

Post a Comment