பிரிவு- II

Friday, January 28, 2011துவக்கத்தில்
புடைசூழதான் இருந்தேன்.
காலஞ் செல்லச் செல்ல
ஒவ்வொருவராய் இடம் பெயர
என்னைச் சுற்றி வெற்றிடங்கள்.
யார் கொண்டும் நிரப்பிட மனமில்லை
அவ்விடங்களை
வெறுமைகளை காணச் சகியாது
புலம் பெயர்ந்தவர்க்கும் எனக்குமிருந்த
உறவுகள் குறித்த சிறுகுறிப்புகள்
வெற்றிட நிரப்பிகளாய்...
என்றாவதொரு நாள்
எனதுடலும் என்னைப் பிரியுமே!
அப்போததன் வெறுமை நிறைக்க
யார் குறிப்பெழுதுவார்?

2 comments:

Balaji saravana said...

பிரிவை நினைத்து ஏங்கும் நெஞ்சம் ஒன்றாவது வேண்டுமென நினைக்க வைத்தது இக்கவிதை. அருமை வருணன்!

வருணன் said...

நன்றி பாலா.

Post a Comment