பிரிவு- III

Sunday, January 30, 2011



தேவதை கதைகளில் மட்டுமே
இப்போதெல்லாம் உன்னை
கேட்கவும் பார்க்கவும் முடிகிறது.

நிர்பந்திக்கும் பணி நிமித்தமாய்
பல மைல்களுக்கப்பால்
நீயும் நானும்.

நமக்கு ஒரு சேர வாய்த்திருக்கும்
பிடிவாதத்தினாலும், அசாத்திய
பொறுமையினாலும் நம்மிடையெ
உள்ள தொலைவினை
அளந்தபடி நாம்.

நம்மிடையேயானை இருப்பை
சொல்லும் போது மட்டும் பிரிவென்னும்
வார்த்தை வாக்கியமாய் வளர்கிறது.

நாள்தோறும் விசித்திர விளையாட்டுகளை
காட்டியபடி தானிருக்கிறது
நம்மிடையேயுள்ள தூரம்.

தொலைவாய் செல்லச் செல்ல
என்னுள்ளே ஊடுருவிக் கலக்கும்
முரண் புதிராய்...

என் தீவின் கரைதனில் கன்னங்களில்
கைகள் பதித்தபடி நான்...
ஏதோ ஒரு நாள் வரக்கூடிய உன்
தோனியின் வரவை எதிர்நோக்கியபடி.

10 comments:

Philosophy Prabhakaran said...

// தோனியின் வரவை எதிர்நோக்கியபடி... //

ஏன்...? ஒருவேளை யுவராஜ் சிங் அவுட் ஆயிட்டாரா...?

ஜெயந்த் கிருஷ்ணா said...

காத்திருப்புகளிலையே காலம் பல கரைந்து விடுகிறது..

Anonymous said...

உங்களின் மிகச் சிறப்பான கவிதைகளுல் இதுவும் ஒன்று வருணன்! :)

வருணன் said...

நாசமா போச்சு... இது அந்த தோனி இல்லை நண்பா... :)

வருணன் said...

ம்... காத்திருப்பது ஒரு சுகமான வலி நண்பா...

வருணன் said...

நன்றி பாலா...

அன்புடன் மலிக்கா said...

வருணன்
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

வருணன் said...

மிக்க நன்றி மல்லிகா...

Unknown said...

உங்கள் வலைப்பக்கத்தில் என் முதல் வருகையிதுவென்று அறிகிறேன்.. பிரிவென்று பெயர் வைத்து பிரியாமல் தொடர்ந்து செல்லும் நினைவுகளால் என்னையும் நீண்ட தூரத்திற்கு அழைத்துச்சென்றது கவிதை..தேவதை கதையில் தொடங்கி, ஒரே குணம்வாய்க்க பெற்றவரெனச்சொல்லும் இடத்தில் காதலை ரசித்தேன்.. பிரிவென்பது காதலுக்கு இல்லவே இல்லை என்பதை அழகுற சின்ன எதிர்ப்பார்ப்போடு முடிகின்ற கவிதை அழகு..

அதிகம் ரசித்த இடம்

நம்மிடையேயான இருப்பை
சொல்லும் போது மட்டும் பிரிவென்னும்
வார்த்தை வாக்கியமாய் வளர்கிறது.

தொலைவாய் செல்லச் செல்ல
என்னுள்ளே ஊடுருவிக் கலக்கும்
முரண் புதிராய்...

இந்த இரண்டு பத்தியும் அதிக கவனமீர்த்தது..வாழ்த்துகள்

வருணன் said...

தங்களது இந்த பின்னூட்டம் என்னையும் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது ரேவா. பிரிவெனும் வதையில் தான் காத்டிருப்பின் ருசி அதிகம் தெரிகிறது. வாழ்க்கை விசித்திரமானது.

Post a Comment