சிறிது நேரத்திற்கெல்லாம் நோர்மாவின் இல்லத்திலிருந்து அவள் தற்கொலைக்கு
முயன்றாள் என மேக்சிடம் இருந்து தகவல் வர பதறி விரைகிறான். தனது சவரக் கத்தியால் அவள்
கைகளை அறுத்துக் கொண்டிருக்கிறாள். தன்னை விட்டுப் போக வேண்டாமென்று இறைஞ்சுகிறாள்
நோர்மா. அவள் மீது காதல் இல்லையெனினும் பரிதாபம் கொள்கிறான் கில்லிஸ். அவளோடு
இருக்க சம்மதிக்கிறான். அவனது இருப்பு அவளுக்கு புதுத் தெம்பளிக்கிறது. தனது
திரைஉலக மறுபிரவேசத்திற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகிறாள். பாராமௌண்ட்
ஸ்டுடியோவிற்கு சென்று தான் பலமுறை இணைந்து பணியாற்றிய இயக்குனர் சிசில் பி.
டிமிலியை, அவள் தான் அனுப்பிய திரைக்கதையை குறித்து அவர் பல நாட்களாய் ஏதும்
பேசாததால், நேரிலேயே சந்திக்க வருகிறாள். பழைய நட்பினை மதித்து அவர் அவளை
வரவேற்கிறார். டிமிலியின் உதவியாளர் பலமுறை அவளோடு தொடர்பு கொண்டதாகவும் ஆனால் தான்
அவரோடு பேச விரும்பவில்லை எனவும் அவள் சொல்ல அவரோ அவளை படப்பிடிப்பு அரங்கத்திலேயே
அமர செய்கிறார்.
உண்மையில் அவரது உதவியாளர் ஒரு படப்பிடிப்பிற்காக
நோர்மாவின் காரை வாடகைக்குக் கேட்பதற்காகவே அவளைத் தொடர்பு கொண்டதை அறிகிறார்.
இவ்விடயத்தை கில்லிஸ் வாயிலில் வேறொருவர் சொன்னதாய் மேக்ஸ் சொல்ல அறிகிறான்.
அங்கு அரங்கில் நோர்மாவோடு வேலை செய்த ஒரு லைட் பாய்
அமர்ந்திருப்பது அவள் தான் என அடையாளம் கண்டு அவளை நோக்கி விளக்கினைத் திருப்ப
தளத்தில் இருக்கும் அனைவரும் அவளை அடையாளம் கண்டு மொய்க்கின்றனர். நோர்மா தான்
இன்னும் ரசிகர்களால் விரும்பப்படுவதாய் கட்டமைத்த கனவுக் கோட்டை இன்னும்
பலமாகிறது. ஆனால் அவர்கள் உண்மையில் இவளை கடந்த காலத்தின் ஒரு திரை ஆளுமை என ஒரு
வெகுசன ஆர்வத்தில் மாத்திரமே பார்க்கின்றனர்.
மகா மோசமான திரைக்கதையை படமெடுக்க யார் தான் முன்வருவார்.
டிமிலி நோர்மாவிடம் நாசுக்காக சினிமா மாறிவிட்டதெனும் உண்மையை, சொல்கிறார். ஆனால்
அவளோ அதனைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. உடனே அவர் அத்திரைக்கதையை இயக்க
அதில் தான் நாயகியாக திரையுலகில் மறுபிரவேசம் செய்வதாய் குதூகலிக்கிறாள். அவளைப்
புண்படுத்தாமல் பார்க்கலாம் என் சொல்லி அனுப்புகிறாள். தான் மீண்டும் நடிக்கப்
போவதாய் மிக உறுதியாய் நம்பும் நோர்மா அதற்காக அழகை மேம்படுத்திட தன் உடலை வருத்தி
பல சிக்கிச்சைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறாள்.
இதே வேளையில் இரவுகளில் அவள் அறியாமல் கில்லிஸ் பெட்டியின்
துணையோடு திரைக்கதை எழுதுவதில் தீவிராமாகிறான். இதனை நோர்மா விரைவிலேயே அறிய
வருகிறாள். சிறிது சிறிதாக பெட்டி தன்னையும் அறியாமல் கில்லிஸின் மீது
காதல்வயப்படுகிறாள். அவனுக்கும் அவளைப் பிடிக்கும் தான்.
நோர்மா என்னதான் நடிகையாக இருப்பினும் முதலில் அவள் பெண்.
ஒரு சராசரிப் பெண்ணுக்கேயான அத்துணை ஆசாபாசங்களும் குணாதிசியங்களும் அவளுக்கும்
உண்டு. கில்லிஸ் தன் காதலை ஏற்றுக் கொண்டதாகவே அவள் கருதிக் கொள்கிறாள். அவன் சந்தர்ப்பவசத்தால்
அவளோடு இருப்பதை அவள் யோசிக்க மறுக்கிறாள். எங்கே கில்லிஸை பெட்டி தன்னிடமிருந்து
பறித்து விடுவாளோ எனும் அச்சம் அவளை ஆட்கொள்கிறது. ஒரு சாராசரி பெண்ணுக்குரிய
பொறாமை அவளை அலைக்களிக்கிறது.
மேக்ஸின் வழியாகவே அவன் நோர்மா மூன்று முறை திருமணம் செய்து
கொண்டதில், முதல் கணவனே மேக்ஸ் தான் எனும் ரகசியத்தை தெரிந்து கொள்கிறான். அது
தெரிந்ததும் தான் அவளை விட்டு விலகி மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை துவங்கும் முனைப்புடன்
அவளின் அறைக்கு செல்கிறான். இந்த தருணத்தில் பெட்டிக்கே தொலைபேசியில் நோர்மா
தொடர்பு கொண்டு கில்லிஸ் நடிகை நோர்மாவின் மாளிகையில் தங்கியிருப்பதாக அவளே
சொல்கிறாள்.
அத்தனையையும் கில்லிஸ் அவளுக்குப் பின்னால் இருந்தபடி
கேட்டுவிட்டு அவளிடம் இருந்து தொலைபேசியை பிடுங்கி பெட்டியை நேராக நோர்மாவின்
மாளிகைக்கே வருமாறு கூறி இணைப்பைத் துண்டிக்கிறான்.
கையும் களவுமாய் பிடிபட்ட நோர்மா திகைக்கிறாள். எங்கே
கில்லிஸ் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற அச்சத்திலேயே அவள் அப்படி
செய்ததாகவும், அதற்காக தன்னை வெறுத்து ஒதுக்கிவிடாமல் இருக்குமாறு மீண்டும்
மீண்டும் கண்ணீருடன் மன்றாடுகிறாள். அதற்குள் பெட்டி மாளிகைக்கு வர கில்லிஸ் அவளை
சந்திக்க வாயிலுக்குச் செல்கின்றான். அங்கெ அவன் கேள்விகளோடு காத்திருக்கும்
பெட்டியை சந்திக்கிறான். அவள் தன்னொடு வந்துவிடும்படி அவளை வேண்டுகிறாள்.
No comments:
Post a Comment