குழந்தைகளின் உலகங்கள்
Monday, December 20, 2010
Posted by வருணன் at 9:51 PMகுழந்தைகளின்
உலகங்கள் விசித்திரமானவை
அவர்கள் சொல்லும் கதைகளைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் வித்தியாசமானவை
நடவடிக்கைகள் வேண்டாத
அவர்களின் புகார்களைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் ஆச்சரியமானவை
காரணமற்ற பேரழுகைக்குப் பிந்தைய
அவர்களின் - கணப்பொழுதில் மலரும்-
ஆழ் அமைதியையும் அதைத் தொடரும்
குறும்புன்னகையைப் போலவே
குழந்தைகளின் உலகங்களை
நமக்கென்று ஒன்றாய் வைத்துக்கொள்ள
நகலெடுத்திட முடிவதேயில்லை
ஒருபோதும்
பிரதியெடுக்கவியலா
அவர்களது பரிசுத்தங்களைப் போலவே.
இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை(20.12.10) இணைய தளத்திற்கு நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
குழந்தைகள் உலகம் எப்போதும் அதிசயம் தான்!
உயிரோசையில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள் வருணன் :)
Good one Varunan. Congrats.
நன்றி பாலா. நிச்சயமாக குழந்தைகள் உலகம் எப்போதும் அதிசயம் தான்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே. உங்கள் எழுத்துக்களை நானும் ருசிப்பதுண்டு மின்னிதழ்கள் வாயிலாக.ஆனால் தங்களது வலைப்பூவை தொடர வழியில்லையோ?
//ஒருபோதும்
பிரதியெடுக்கவியலா
அவர்களது பரிசுத்தங்களைப் போலவே//
well said!!
நன்றி குட்டி பையா...
Post a Comment