அவனறியா பொழுதில்
Monday, December 6, 2010
Posted by வருணன் at 8:18 PMஅவனுக்கும் வனாந்தரத்திற்கும்
தீராத போட்டி
ஆக்கிரமிப்பதில்
பேராசை வாளெடுத்து
மூளை கூர்தீட்டி
ஆட்கொண்டான் வனம் முழுவதையும்
ஒரு மரமும்
ஒரு கிளையும்
ஒரு இலையும் தப்பவில்லை.
ஒரு புல் கூட...
தாக்குப் பிடிக்கத் திராணியற்றுப் போனாயென
பழிப்புக் காட்டி நகைத்தான்
மீதமிருந்த வனமதிர
எதிர்க்காதது போலிருந்த வனமோ
தன் மாய இருள் நிறைத்து
அரூபமான தன் கிளைகள் பரப்பி
வேர் பிடித்து
செழிக்க ஆரம்பித்திருந்தது
அவன் அகத்தே
அவனறியா கணம் தொட்டே.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.12.10) இணைய தளத்திற்கு நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
"ஆணவ வனம்"
எக்சலன்ட் வருணன் :)
பிரமாதமான வரிகள்...கலக்கிட்டீங்க ஜோலா...
நன்றி பாலா...
நன்றி ராஜா...
அருமை
Post a Comment