எழுத்தோவியம்

Friday, December 31, 2010உன்னருகே அமர்ந்துன்னை
வார்த்தைகளால்
வரைந்து கொண்டிருக்கிறேன்.
ஏனிப்படி பார்க்கின்றாயென
நீ எழுப்பா கேள்விக்கும்
பதில் தயார் நிலையில்
என் வசம்.
புருவமுயர்த்தி கண்கள் இடுக்கி
உதடு சுழித்து
யோசிக்கும் நாழிகையில்
உன் நாடிகளில் தாளமிடுமந்த
மென்விரல்களின் லயமும்
அனிச்சையாய் அவ்வப்போது
முன் வழிகிற சிகை திருத்தும்
லாவகமும்
பரிகசித்து பொய் கோபம் காட்டி
கழுத்துக் காம்பொடித்து
முகமலர் தாழ்த்தி
போவென சொல்லுமந்த நளினங்களும்
வசப்படுகின்றன வார்த்தைகளுக்குள்
கொஞ்சமேனும்.

8 comments:

சண்முககுமார் said...

வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

கமலேஷ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வருணன் said...

நன்றி குமார். கண்டிப்பாக வாசித்துப் பார்க்கிறேன்... புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வருணன் said...

நன்றி.புத்தாண்டு வாழ்த்துக்கள் கமலேஷ்.

குட்டிப்பையா|Kutipaiya said...

இனிமை! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வருணன் said...

நன்றி குட்டிபையா.மலர்ந்த ஆண்டு அனைவருக்குமே நலம் சேர்க்கட்டும். வாழ்த்துக்கள்.

ஜெ.ஜெ said...

கவிதை அருமை...

வருணன் said...

நன்றி ஜெ.ஜெ

Post a Comment