நறுமணமான பாடலொன்று

Wednesday, December 1, 2010இறந்த பகலின்
சலனமற்ற பிரேதம் போல
அசைவற்ற இரவு
தனிமையில் காய்கிறது.
நிசப்தத்தில் கருக்கொண்டு
பிரவாகித்த மௌனத்தின் பாடல்
பாடப் பட்டது
பூக்கள் அவிந்த பொழுதின்
முந்தைய கணம் வரை
மறுகணமே பரவத் துவங்கியது
நறுமணமாய் போன பாடலொன்று.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (28.11.10) இணைய தளத்திற்கு நன்றி.

1 comment:

Balaji saravana said...

பாடல் நறுமணமாய்..
எவ்வளவு அழகான கற்பனை.. அழகு

Post a Comment