ஒளியால் செய்த சிறை

Monday, October 8, 2012




ஒளியின் விளிம்பில்
தொக்கி நிற்கிறது இருள்
பரவிட தயார் நிலையில்

காரிருள் வென்று என்
பார்வையைப் பறிபதற்கு முன்னரே
என் பிரியங்களை பொறுக்கிச் சேர்த்திட
எத்தனித்து பரபரக்கிறேன்.

எனது அவசரங்கள் ஏதுமே
புரியாதது போல் இயல்பாக
இருக்கிறாய் நீ

நினைவுகளின் மீது படரும் கருமையை
தூசென நினைத்து ஊதிட விழைகிறேன்
புன்னகை சிந்தியபடி
வெறும் சாட்சியாய் அருகே நீ

இறுதியாய் என்னையும்
கருமையில் கரையும் என் பிரியங்களையும்
ஒரு புகைப்படத்தினுள் அடைக்கிறாய்
ஒற்றை மின்னல் மின்னிய இடைவேளையில்.  

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை(08-10-12)
இணைய இதழுக்கு நன்றி. 

2 comments:

M.Rishan Shareef said...

//இறுதியாய் என்னையும்
கருமையில் கரையும் என் பிரியங்களையும்
ஒரு புகைப்படத்தினுள் அடைக்கிறாய்
ஒற்றை மின்னல் மின்னிய இடைவேளையில்//

காட்சிகளைக் கண்முன்னே வரைந்துவிடும் வரிகள். அழகு !

வருணன் said...

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா...

Post a Comment