தடயமின்றி

Sunday, October 14, 2012


ஊடலால் பிரியத்துடிக்கிற
தம்பதியராய் தண்டவாளங்கள் அருகருகே

கிடைத்த உலோகத் துண்டை
காந்தமாக்கும் ஆர்வத்தில் சேரிச் சிறுவன்

ஒற்றை தண்டவாளத்தில்
நாற்காலியிலமரும் முதலாளியாய்
அமர்கிறது உலோகத் துண்டு
காலடியில் எடுபிடி போல் சிறுவனின்
ஆவலையும் காத்திருப்பையும்
அருகருகே அமர்த்திக் கொண்டு

தூரத்துச் சீழ்க்கையொலியில்
பரபரக்கும் பிஞ்சு மனதின் ஏக்கமறியாது
அனைத்தின் மீதும் ஏறியிறங்கிக்
கடக்கிறது ஓர் புகைவண்டி.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(12-10-12)
மின்னிதழுக்கு நன்றி.
பட உதவி: http://www.thehindu.com/multimedia/dynamic/01114/SA15_TRAIN_GID534V_1114343e.jpg

4 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

கவிதை, நினைத்தறியாத் தளத்தைப் பதிவு செய்கிறது.

//தூரத்துச் சீழ்க்கையொலியில்
பரபரக்கும் பிஞ்சு மனதின் ஏக்கமறியாது
அனைத்தின் மீதும் ஏறியிறங்கிக்
கடக்கிறது ஓர் புகைவண்டி.//

அருமையான வரிகள். தொடருங்கள் !

வருணன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா !

Priya said...

கவிதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!

வருணன் said...

தாங்கள் கவிதைகளை வாசித்து சிலாகிப்பது மிக்க மகிழ்வையளிக்கிறது. இப்போது அதிகம் எழுதாமல் இருப்பது குறித்து வருந்தத் தோன்றுகிறது, இப்படி எழுத்தை தொடரும் ஓர் அன்பி இருப்பது தெரிகையில்.

Post a Comment