நதியின் ருசி

Saturday, May 31, 2014எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும்
நல்ல பழக்கமுள்ள சிறுமியொருத்தி
என்னிடம் கேட்டாள்
ஆத்துத் தண்ணி எம்மாமா ருசியாயிருக்கு?

நதி நகர்ந்து கொண்டேயிருப்பதால்
ருசியேரிக் கிடப்பதாய்ச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்துச் சொன்னாள்
அப்ப நாமும் எதிலேயும் தங்காம
நகர்ந்தா வாழ்க்க ருசிக்கும்ல!

அவள் தலைகோதி புன்னகைத்தேன்.

No comments:

Post a Comment