ஓர் இரவின் கதை

Wednesday, May 30, 2012

முத்தத்தைத் தேடி
முத்தத்தில் தொலையும்படியாக
ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது
அவ்விரவு
பனியின் குளிர் போக்கி
கதகதப்பாக்கிடும்
கனப்பு அடுப்பைப் போல
இளவெப்பம் கூட்டும்
ஆடை நெகிழ்த்தி
நேர்த்தியாய் விரவும் விரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர் தந்து
பறித்து
குடித்துக் களிக்கும்படியாக
கொடுக்கப்பட்டபோதே
பெறப்பட்டுமிருந்த அந்த
முத்தங்களாலேயே எழுதப்பட்டது
அவ்விரவின் கதை.4 comments:

சசிகலா said...

முத்தத்தைத் தேடி
முத்தத்தில் தொலையும்படியாக
ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது// முத்தான வரிகள் ரசிக்கும் படியாக இருந்தது .

வருணன் said...

நன்றி சசி. நீண்ட இடைவிறிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கும் எனக்கு தங்களின் பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது. தொடர்ந்து வருக.

சித்தாரா மகேஷ். said...

//கொடுக்கப்பட்டபோதே
பெறப்பட்டுமிருந்த அந்த
முத்தங்களாலேயே எழுதப்பட்டது
அவ்விரவின் கதை.//

முயற்சியை இடைவிடாது தொடருங்கள் சகோதரா.தொடரட்டும் தங்கள் பயணமும்.வாழ்த்துக்கள்.

வருணன் said...

நன்றி சித்தாரா. தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும்.

Post a Comment