யாதுமாகிய யான்

Monday, September 5, 2011




அவள் விழி குளத்தினுள்
நீராடும் என்னையும்
அதன் கரையோரங்களில்
தளும்புமவள் கனாக்களையும்
அன்னல் யான் நோக்கினேன்
அவள் நோக்கா தருணங்களில்

மஞ்சமென நினைத்தென்
மடிதனில் நீ கிடக்கையில்
நின் விழிதனில் மின்னும்
அதே கனவுகளும் ஆசைகளும்

யாதுமானவன் எனக்கு நீயென
வாழ்ந்திடுமென் சகியுனக்கு
வேறெதனைச் சிறப்பாய்
அளித்திட முடியும்
என்னைத் தவிர...?

2 comments:

Prem S said...

"யாதுமானவன் எனக்கு நீயென
வாழ்ந்திடுமென் சகியுனக்கு
வேறெதனைச் சிறப்பாய்
அளித்திட முடியும்
என்னைத் தவிர..." அருமை அன்பரே

வருணன் said...

நன்றி பிரேம்...
நன்றி ரத்னவேல் ஐயா...

Post a Comment