யாதுமாகிய நீ
Saturday, August 13, 2011
Posted by வருணன் at 6:30 AMநாட்டியக்காரியின் சலங்கையின் பரல்களில்
நர்த்தனமாடும் ஒலியாய் நீ வெளிவருகிறாய்
பாடகனின் குரலோடு குழைந்து வந்து
செவி சேர்கிறாய்.
ஓவியனின் தூரிகையில் வண்ணமாய் வழிந்து
அப்படைப்பின் உயிர் நாதமாகிறாய்
வீணையின் நரம்பில் இன்னிசையாய்
தெறித்து செவிகள் வருடுகிறாய்.
மலர்களின் மணமாய் நாசிகள் நிறைகிறாய்
யாதுமாயிருக்கும் நீ என்னுள்
எப்படியிருப்பாய்?
என் உணர்வுகளெல்லாம் திரட்டினேன்
அவ்விடத்தே நீயிருந்தாய்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அழகிய கவிதை
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா...
Post a Comment