என் கனவுகளின் தேசம்

Tuesday, May 25, 2010

கவிதைகளின்றி அமையாதென் உலகு. கவிதைகள் நுட்பமானவை.

இதயங்களின் மொழி கவிதை. என்னை பொருத்தவரை கவிதை ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் இல்லை. வாசிப்பின் போது மனதில் ஒரு சிறு மலர்ச்சியையோ அல்லது ஒரு மெல்லிய சலனத்தையோ உண்டாக்கினாலே போதுமென்பது என் கருத்து.கடவுளின் மொழி கவிதையென்பேன்.அதனை எழுதுவதும் வாசிப்பதும், இரண்டுமெ அலாதியானவை.

வாழ்வின் ஒவ்வொரு கணமும் கவித்துவமானவை.அதிலும் காதற்கணங்கள் அதிநுட்பமானவை. சூல் கொண்ட என் கவிதைகள் பிரசவிக்கும் சகலத்தையும் . சிறகுகள் முளைத்த இப்பறவை உலாவும் அங்கிங்கெனாதபடி எங்கும், பரம்பொருளை போல. கவிதைகள் என் எண்ணங்களின் விலாசம். வார்த்தைகள் அதன் முகங்கள்.வாருங்கள் உங்கள் விழிகள் செவிகளாகட்டும் . கடவுளின் மொழியில் நமது உரையாடலை துவங்கலாம்.



குறிப்பான்கள்: (LABELS)

ஸ்பரிசம் மென்மையான காதல் கவிதைகள்

சலனம் - பொதுவான பாடுபொருளை உடைய கவிதைகள்

ரணம் காதலில் சோகம்

மோக புத்ரி - மோகத்தினால் சூல் கொண்ட கவிதைகள்

முதல் பிரதி - கவிதை பழக ஆரம்பித்த போது கிறுக்கியவை

ஒரு சொல் - பகுப்புகளுக்கு உட்படாத மற்ற கவிதைகள்


1 comment:

R. Gopi said...

\\முளைத்த இப்பறவை உலாவும் அங்கிங்கெனாதபடி எங்கும், பரம்பொருளை போல.\\

\\உங்கள் விழிகள் செவிகளாகட்டும்\\

சூப்பர். பின்னிட்டீங்க

Post a Comment