சொப்பனக் கூடு

Saturday, March 24, 2012
புதர்களும் மரங்களும் மண்டிய
அடர் கானகத்தினூடேயான எனது
நெடும்பயணத்தின் இடையே
களைப்புத் தீர கண்ணயர்ந்தேன்.
உறக்கத்தினூடே எதிர்பாரா தருணத்தில்
உடைந்த என் சொப்பணக்கூட்டினின்று- தேனடை
யுடைத்து தேன் துளி சிந்துதல் போல்- நாலாபுறாமும்
தெரித்து விழுகிறாய் நீ.
தன் கால்களால் கடத்திய மகரந்தங்களைப்
பரப்பிய வண்டின் திருப்தியுடன் மீண்டும்
கண்ணயர்ந்தேன்.

2 comments:

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

வருணன் said...

நன்றி அன்பரே.

Post a Comment