ஒரு நீள்கனவின் சாலை

Wednesday, January 11, 2012




இதுகாறும் அனுமதியாத தேவதை
அருகமர இடம் தருகிறாள்
தன் சிறகுகள் ஒடுக்கி
பேச நகைக்க வருட தீண்ட
அனுமதித்து சுகித்து சுகமளிக்கிறாள்.
விரல்கள் ஸ்பரிசித்த விரல்களிப்போது
மலைகள் ஏற எத்தணிக்கையில்
முகடுகள் தொடச் சொல்கிறாள் கண்கள் செருகி
மலைகளின் ரம்யத்தையும் மெதுமையையும்
வெம்மையையும் குளுமையையும் ஒரு சேர
வாசிக்கின்றன விரல்கள் வரிவரியாய்
மலைகள் குறித்த மிகப் பிரம்மாண்டமான
ஒரு ஈரக் கனவு உலரத் துவங்குகிறது
இறுக்கம் கூடும் விரல்களுக்கிடையே.
கொண்டையூசி வளைவுகளில் இளைப்பாறி
மென்நாணல்கள் மண்டிய புதர்களின்
புதிரவிழ்க்க விரியும் விரல்களை மட்டும்
விரைந்து பற்றி வேண்டாமென்கிறாள்
விழிமீன்களுள் விண்மீன்களையும்
இதழ்களில் ஆரஞ்சுச் சூரியனின்
இரு சுளைகளையும் ஏந்தியபடி.
பின்வாங்கிடும் விரல்களின் பயணமோ
மற்றுமொரு நீள்கனவின்
இருள் கவிந்த சாலைகளினின்று...

3 comments:

வருணன் said...

நன்றி ரத்ன வேல் அவர்களே .

Marc said...

ஒரு ஈரக் கனவு உலரத் துவங்குகிறது
இறுக்கம் கூடும் விரல்களுக்கிடையே.
கொண்டையூசி வளைவுகளில் இளைப்பாறி
மென்நாணல்கள் மண்டிய புதர்களின்
புதிரவிழ்க்க விரியும் விரல்களை மட்டும்

வார்த்தைகளின் அடர்த்தி மூச்சடைக்க செய்கிறது.அருமை கவிதை

வருணன் said...

நன்றி தனா. இன்று தான் தங்கள் பின்னூட்டத்தை வாசித்தேன். தாமதமான மறுமொழிக்கு மன்னிக்க.

Post a Comment