ஒவ்வொரு முறையும்

Thursday, April 7, 2011



இதயத்துடிப்பை அறிய நாடிபிடிக்கும்
மருத்துவனைப் போல என் கரங்கள்
பற்றியென் தோள்களுக்கிடையே
சாய்ந்து கொள்வாய்
அப்பொதெல்லாம்
கழுத்துக் காம்பினை கைகளில் ஏந்தி
முகமலர் நிமிர்த்தி
உன் விழியுடன் கரைந்துன்னை நெஞ்சோடு
அணைத்துக் கொள்ள அலைபாயும்
கைகளோடு மனமும்...
ஆயினும் அதிலுனக்கு பிரியமில்லாது
போவதால் தலையுயர்த்தி
வானம் பார்த்து கண்கள் செருகி
விண்ணில் மிதக்கிறேன்
நீ சாயும் ஒவ்வொறு முறையும்.

7 comments:

Anonymous said...

AAha!....Kathal soddukirathu......
Vetha-Elangathilakam.
Denmark.

நிரூபன் said...

ஒவ்வோரு முறையும் உணர்ச்சிகளின் பிரவாகமாய், காதல் கொண்ட இளைஞனின் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கிறது.

நிரூபன் said...

கழுத்துக் காம்பினை கைகளில் ஏந்தி
முகமலர் நிமிர்த்தி//

கவிதையில் தொக்கி நிற்கும் இலக்கிய நயத்திற்கு இவ் வரிகளே சான்று பகர்கின்றன.

தன் எண்ண ஓட்டங்களைக் கவிதையின் முதல் பகுதியில் சொல்லி வந்த கவிஞர், அந்த ஆசைகள் நிறை வேற முடியாத சூழலில்
கனவுலகில் சஞ்சரிப்பதாக யதார்த்தம் கலந்த வார்த்தைகளைக் கூறிக் கவிதையினை முடித்திருக்கிறான்.
இது இன்றைய பல இளைஞர்களின் நிறைவேற்ற முடியாத உள்ளத்து உணர்வுகளின் காட்சிப்படுத்தல்!

வருணன் said...

நன்றி கோவைக்கவி.

வருணன் said...

நன்றி நிரூபன்.

தங்களது வாசிப்பின் தீவிரத் தன்மை நீங்கள் விளக்கமாக அளிக்கும் பின்னூட்டங்களிலேயே தெளிவாகிறது.

மனம் நெகிழ்கிறேன் இணையப் பெருங்கடல் வழியே தங்களை வந்தடைந்தமைக்கு...

அகலிக‌ன் said...

செகாவ் வின் பந்தயம் சிறுகதை பற்றிய உங்கள் வலைப்பதிவை வாசித்தேன் செகாவை அறிமுப்படுத்தியுள்ளீர்கள் நன்றி "ஒவ்வொருமுறையும்" கவிதையில் பெண்ணுரிமை மீதான உங்கள் பார்வை தெரிகிறது.

வருணன் said...

நன்றி அகலிகன். பொதுவாக பழைய பதிவுகளுக்கு யாரும் பின்னூட்டங்கள் இடுவதில்லை. தாங்கள் கருத்தைப் பகிர்ந்தது மிகுந்த உற்சாகம் அளிப்பதாய் உள்ளது. மனமார்ந்த நன்றிகள்.

Post a Comment