மௌன ராகம்-II

Wednesday, November 3, 2010வார்த்தைகளுக்கும் மௌனத்திற்கும்
இடையேயான தூரம் எவ்வளவு?

கதை பேசாது விடை தேடி
நாமிருவரும் எதிரெதிரே

தூரத்துத் தெருவிளக்கும், சில
சில்வண்டுகளும் சாட்சிகளாய்

பனியாய் உருகும் நேரம் நம்மிடையே...

வார்தைகளற்று விழியால் புசிப்பதைத் தவிர
வேறேதும் செய்யவில்லை இருவருமே

பட்டாம்பூச்சியாய் படபடக்குமுன்
விழிகள் பார்க்கையில்
விட்டிலாய் துடிக்கும் மனது
பேசிவிட...

கண்டோம் இறுதியில்
வார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமான
தூரங்கள் நம் கர்வத்தால்
அளக்கப்படுகிறதென்பதை...

தெரிந்தும் நாம் பேசவில்லை.

என்னிதழ் பூட்டினைத் திறந்திட
இதொ நெருங்கி வருகிறது
உன் சாவி !

2 comments:

Balaji saravana said...

//வார்த்தைகளுக்கும் மௌனத்திற்கும்
இடையேயான தூரம் எவ்வளவு?//

//வார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமான
தூரங்கள் நம் கர்வத்தால்
அளக்கப்படுகிறதென்பதை...//

செம!
இருவருக்குமுள்ள ஈகோவை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வருணன்...
அருமை...

Raja said...

" என்னிதழ் பூட்டினைத் திறந்திட
இதொ நெருங்கி வருகிறது
உன் சாவி !"
வழக்கம் போலவே கலக்கிவிட்டீர்கள் வருண்...

இதொ? இதோ?

Post a Comment