நம் பந்தத்தின் விளைவாய்
இமை மூடா இரவுகளோடு
வாசம் செய்கிறேன் நான்
உன்னைப் பற்றிய
குழப்பங்களால் அலைகிறது மனம்
ஓய இடம் தேடி
வேண்டாமென்றே சொன்னாலும்
உன்னைப் பற்றிய
கவலைக் குழந்தைகள் என்
மனக்களிறின் மீதேறியமர்ந்து
சவாரி செய்யவே விரும்புகின்றன!
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
4 comments:
nice one too...
வேண்டாமென்றே சொன்னாலும்
உன்னைப் பற்றிய
கவலைக் குழந்தைகள் என்
மனக்களிறின் மீதேறியமர்ந்து
சவாரி செய்யவே விரும்புகின்றன!
very nice...
நன்றி நண்பர்களே .
கவலைக் குழந்தைகள் very nice uruvagam varunan
Post a Comment