
அதிகாலை துயில் எழுந்து
அவசரக் குளியல்
அரைகுறை உணவு
ஆலாய் பறந்து அலுவலகம்
செல்லும் தடத்தில் போக்குவரத்து
நெரிசல் வாங்கும் பாதி சீவனை
மேலதிகாரியின் வசவுகள்
வாங்கும் மீதி சீவனை
அரட்டையுடன் உட்செல்லும்
மதிய உணவு
ஐந்தடிக்கக் காத்திருந்து
மீண்டும் கட்டப்படும்
கால்களில் சக்கரம்
யதார்த்தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும்
நகரத்துக்குள் தகுதிக்கு மீறிய அவாக்களுடன்
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்
என்னையும் என் பரிசுத்தத்தையும்.
1 comment:
nice kavithai varunan, ஆனால் நீங்கள் எந்த பரிசுத்தமானவற்றை இழந்தீர்கள் என்பதை கவிதையில் இன்னும் தெளிவாய் சொல்லிருக்கலாம்
Post a Comment