
நீ பருகும் நீராய் மாறி
உனக்குள் புகுவேன்
வியர்வைத் துளியாய்
உன் மீது வழிவேன்
அமரும் இருக்கையாகி
உன்னை உள்வாங்கி அணைப்பேன்
யாக்கை யுடைத்து
வளியாய் மாறி
உன்னுள் புகுவேன்
தென்றலாய் மாறி உன்
குழல் கலைத்து அதனுள்
கரைவேன்
உன்னோடிருத்தல்
மட்டுமே முக்கியம்
எதுவாய் என்பதல்ல.
3 comments:
தூய காற்று தூய தண்ணீர் போல உங்களது தூய காதல் ...
மகிழ்ச்சி ஜோ !
நன்றிகள் பல நியோ.
very lovely varunan...
Post a Comment