
பிரிதொரு நாளில் நிகழ்ந்த
துயரத்தை துவட்டி எறிகிறேன்.
நெகிழ்ந்து போனதொரு நெருங்கிய
பந்தத்தினை சலனமின்றி பார்த்தபடி
சற்றுமுன் அடைந்த ஒரு நன்மையின்
நிழலில் ஓய்வெடுக்கிறேன்.
கடவுள்கள் வசிக்கும்
கருவறை தரிசனங்கள் அவ்வப்போது
ரணங்களை வீட்டு
வரவேற்பறையில் அலங்காரமாய்
வைத்தபடி மீளாத் துயரினின்றும்
மீண்டு செல்கிறேன்
கதவுகள் சன்னல்கள் எல்லாம்
மூடிக்கொண்டாலும்
சாவித் துவாரங்கள் வழியாகவாவது
இடம் பெயர்ந்து சென்ற வண்ணமிருக்கிறேன்.
3 comments:
சற்றுமுன் அடைந்த ஒரு நன்மையின்
நிழலில் ஓய்வெடுக்கிறேன்
சாவித் துவாரங்கள் வழியாகவாவது
இடம் பெயர்ந்து சென்ற வண்ணமிருக்கிறேன்
நல்லா இருக்கு ...
நன்றி பூங்குழலி.கவித்துவமான பெயர் தங்களுக்கு.
'சற்றுமுன் அடைந்த ஒரு நன்மையின்
நிழலில் ஓய்வெடுக்கிறேன்' nice lines varunan
Post a Comment