
உன் கால்விரல் தூரிகையால்
என்னதான் ஓவியம்
தீட்டுகிறாய் என் கால்களில்?
வரைவது எதுவெனத் தெரியாத
போதிலும் என்னையே நானுனக்கு
வண்ணமாய் உருக்கித் தருகிறேன்
என் செவிகளுக்கு மட்டுமே
கேட்கிறது எப்பொதாவது
இடறிடும் கொலுசுகளினின்று
எழும் மெல்லிசை
ஒரு வகையில் இது கூட
போர்க்களம் தான்
அங்கே வாள்கள்
இங்கெ நம் கால்கள்
ஒருவர் பின் ஒருவர்
மௌனமாய் நாம்
அமர்ந்திருப்பினும்
கால்கள் மட்டும் பேசிக்கொண்டே...
அவ்வப்போது நீ ஓய்கையில்
பொறுமையாய்
காத்திருக்கும் என் பாதங்கள்
வார்த்தைகளற்ற மொழியாலான நம்
பிரிதொரு சந்திப்பிற்காய்.
1 comment:
தாங்கள் விரும்பினால் தமிழர்சில் உங்கள் படைப்பை இணைக்கலாம்.
இணைப்பு சுட்டி
Post a Comment