
ரௌத்திரம் பழகியிராதது தவறோவென
எண்ணத் தூண்டும்
அசௌகரிய தருணங்கள்
பழகிய மனிதர்களின் வாஞ்சைகளும்
கரிசனங்களும் போலியேனப்
புலப்படும் வேளைகளில்
படரும் விரக்தியின் நிழல்
ரகசியங்கள் மீதுள்ள ஈர்ப்பு
நீர்த்துப் போகிறது
நிசத்தின் பாரபட்சமற்ற குரூரத்தால்
புலன் தோற்று தாகம் தணிக்க இறங்கிக்
கால்கள் பொசுங்கிய பின்னரே
தெரிகிறது கானல் நீரென
புண்பட்டுத் தோற்ற வெட்கம் தின்ன
சலனமடங்கிய சவத்தைப் போல
யாருமற்று அனல் தகிக்கும்
இம்முடிவிலா பாதையில் இதப்படுத்த
ஒரு காட்டுப் பூவேனும் வழியிலிருந்தால் நலம்
குறிப்பாக தெரிந்தே தோற்கின்ற
இக்காலங்களிலேனும்.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(31.10.10) இணைய தளத்திற்கு நன்றி
7 comments:
நல்ல கவிதை...வாழ்த்துக்கள் நண்பா...
இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!
- படுக்கை நன்கணியார்
அருமை வருணன்..
//புலன் தோற்று தாகம் தணிக்க இறங்கிக்
கால்கள் பொசுங்கிய பின்னரே
தெரிகிறது கானல் நீரென//
செம.. ரொம்ப ரசிச்சேன்...
நல்ல கவிதை.... வளமான வார்த்தைகளுடன் செறிவான நிறைவான கவிதை
தொடரட்டும் உங்களின் கவிதைப் பணி
நன்றி றாஜா. கனத்த இருதயத்துடன் இக்கவிதையை எழுதினேன். இன்றோ வாசித்த உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ரணப்பட்ட மனதிற்கு மயில் பீலியால் வருடப்படும் மருந்தாய்...
நண்பர்களே பாலா, கோபி நன்றிகள் பல...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நீலகண்டன்( அன்பரே, தங்களது பெயரிலேயே எனக்கு ஒரு தோழன் உண்டு).
வருணன்...என் மின்னஞ்சல் கிடைத்ததா?
Post a Comment