
நேற்றுகளில் மட்டுமே வாழ்ந்திருந்த
என்னை இன்றுகளுக்கு
இழுத்து வந்தவள் நீ
எனது நாளைகளில் நீ
இருக்கப்போவதில்லை எனும் யதார்த்தம்
தெரியும் எனக்கு...
நாளைகளைக் குறித்த
கவலைகளில்லை என்னிடம்
இன்று உன்னோடிருக்கிறேன்
அது போதும்.
நாம் சந்திக்கும்
இன்றுகளில் கூட சுதந்திரமாய்
உரையாட முடிவதில்லையென
வருத்தம் கொள்கிறாய்
எனது எண்ண அலைகளை
நீ உள்வாங்கிக் கொள்கிறாயென்பது
எனக்குத் தெரியும்
நீயனுப்பும் பதில்களை
மனக்கண்ணால் படித்துவிடுகிறேனென்பது
உனக்கும் தெரியும்
நம்மிடையேயான தொடர்புகள்
இவ்வாறிருக்க எதற்கு
வார்த்தைகளால் சமைத்த உரையாடல்கள்?
ஊன் தவிர்த்து உயிர் தேடும்
பேரன்பிற்கு தேவையில்லை ஒரு போதும்
ஒலியும்
ஒளியும்.
4 comments:
பார்வையும் மொழியும் இல்லாமல் பாயும் காதல் மின்சாரம் :)
//நேற்றுகளில் மட்டுமே வாழ்ந்திருந்த
என்னை இன்றுகளுக்கு
இழுத்து வந்தவள் நீ//
செம ஸ்டார்ட்!!
நன்றி பாலா...
நன்றி குட்டி பையா... தொடர்ந்து வருகை புரிவதற்கு இன்னுமொரு நன்றி...
Post a Comment