
அருகருகே அமர்ந்திருப்பினும்
பிறர் கவனம் நம் மீது
படியாதிருக்க பேசாதிருக்கின்றோம்.
மெல்ல நம்மிடையே மௌனம்
மொட்டவிழ்கிறது
ஒரு மென்மலர் போல...
மெல்ல மலர்ந்து அது மணம் கமழ்த்தும்
தருணத்தில், யாரோ வார்த்தையுதிர்த்து
அம்மலர்ட்ச்சியை மாய்க்கிறார்
அம்மலரை மீண்டுமெப்படி
மலர்த்துவதென்ற ஆழ்ந்த சிந்தனையில்
நாம் இக்கணத்தில்.
6 comments:
விலகிய திரை மீண்டும் விழுகிறது..
நல்லா இருக்கு வருணன்..
நன்றி பாலா. இவ்வளவு விரைவாக பின்னூட்டத்தை எதிர்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சி...
மலரை மலர்த்த வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு வருணன். எவ்வளாவு மலர்கள் அவ்வாறு மடிகின்றன :( :(
நன்றி இந்திரா... எல்லா மலர்களுக்கும் மலர்கின்ற பாக்கியம் கிட்டிவிடுவதில்லை...
நன்றி குட்டி பையா.
ம்...
மடிகின்ற மலர்களுக்கு கண்ணீர் உகுப்பதைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை...
Post a Comment